இயக்குனர் செல்வராகவன் படத்தில் பிரபல நடிகரின் மகன் கைகோர்க்கிறார்: அவர் யார் தெரியுமா..?
இயக்குனர் செல்வராகவன் படத்தில் பிரபல நடிகரின் மகன் கைகோர்க்கிறார்: அவர் யார் தெரியுமா..?
தமிழ் சினிமாவில் 80, 90களில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் நடிகர் கார்த்திக். இவரின் மகன் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவர் கவுதம் கார்த்திக்.
தற்போது நல்ல கதை அம்சம் கொண்ட கதாபாத்திரங்களில் கவனம் செலுத்தி வருகிறார். பல படங்களில் நடித்தும் சில படங்கள் அவருக்கு ஏதுவாக அமையவில்லை என்றாலும் பல படங்களை வெற்றிப் படமாக கொடுத்துள்ளார்.
அந்த வகையில் தற்போது தனுஷின் அண்ணன் இயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில் நடிகர் கவுதம் கார்த்திக் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இயக்குனர் செல்வராகவன் பல படங்களில் தனுஷை மையமாக வைத்து அவருக்காக கதை எழுதி வருபவர்.அப்படங்கள் மிகப்பெரிய அளவில் வெற்றியும் கண்டது. தற்போது கௌதமை வைத்து கம்மியான பஜ்ஜெட்டில் படத்தை உருவாக்க திட்டமிட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
இந்த படங்களை முடித்து விட்டு நடிகர் தனுஷை வைத்து செல்வராகவன் இயக்க உள்ளதாக சினி வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. இந்த செய்தியை கேட்டு ரசிகர்கள் அனைவரும் வாழ்த்தி வருகின்றனர்.