ஏ.ஆர்.ரகுமான் இசையில் பாடிய நடிகர் தனுஷ் - என்ன படமாக இருக்கும்.?
ஏ.ஆர்.ரகுமான் இசையில் பாடிய நடிகர் தனுஷ் - என்ன படமாக இருக்கும்.?;
நடிகர் தனுஷ் நடிப்பது மட்டுமல்லாமல் இயக்குனராகவும், பாடகராகவும் வலம் வருபவர். பல படங்களில் பாடி அந்த பாடல்கள் ரசிகர்களிடம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றனர். அந்த வகையில் நடிகர் தனுஷ் ஏ.ஆர்.ரகுமான் இசையில் பாடி இருப்பது குறிப்பிடத்தக்கது.
தனுஷ் நடிக்கும் பாலிவுட் படமான "அட்ராங்கி ரே" படத்தில் இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்க தனுஷுடன் அக்ஷய் குமார், சாரா அலிகான் உள்ளிட்டோர் நடிக்கிறார்கள். படத்தின் சூட்டிங் மதுரையில் நடந்தது. இந்நிலையில் நடிகர் தனுஷ் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மாஸ்க் அணிந்தபடி ஏ.ஆர்.ரகுமான் அவர்கள் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு அதில் சாரா அலிகானையும் டேக் செய்துள்ளார்.
இச்செய்தி சமூகவலைதளங்களில் உலாவி வருகின்றன. தற்போது பாலிவுட் பக்கம் அதிக கவனம் செலுத்தி வரும் நடிகர் தனுஷ் ஏற்கனவே ஷமிதாப்,ராஞ்சனா ஆகிய இரண்டு படங்களில் நடித்துள்ளார் மூன்றாவது படமாக அட்ராங்கி ரே படமாகும். தமிழ் போலவே ஹிந்தியிலும் அவருக்கென ஒரு தனி இடத்தைப் பிடிப்பார் என ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.