நாங்க ரொம்ப பிஸி என்ற படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு - உற்சாகத்தில் ரசிகர்கள்.!

நாங்க ரொம்ப பிஸி என்ற படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு - உற்சாகத்தில் ரசிகர்கள்.!;

Update: 2020-10-30 17:12 GMT

கொரோனா ஊரடங்கிற்கு சினிமா வட்டாரங்கள் பல பிரச்சனைகளை சந்தித்து தற்போது மீண்டும் படப்பிடிப்பை ஆரம்பித்துள்ளன. அந்த வகையில் கன்னடம், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிப் படங்கள் ரீமேக் செய்யப்பட்டு தமிழில் மிகப்பெரிய அளவில் வசூலையும் கொடுக்கின்றன. தற்போது மாயா பஜார் 2016' படத்தின் தமிழ் ரீமேக்கான 'நாங்க ரொம்ப பிஸி' படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளது படக்குழு.


















கன்னடத்தில் பெரும் வரவேற்பைப் பெற்ற மாயா பஜார் 2016 திரைப்படம் தமிழில் ரீமேக்காகி வருகிறது. சுந்தர்.சி தயாரிப்பில் உருவாகும் இந்தப் படத்தை பத்ரி இயக்கி வருகிறார். "பிரசன்னா, ஷாம், ஸ்ருதி மராத்தே, அஸ்வின், யோகி பாபு, விடிவி கணேஷ், ரித்திகா சென்" உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள்.

இதன் படப்பிடிப்பு சென்னையில் தீவிரமாக நடந்து வருகிறது.இந்த ரீமேக்கிற்கு "நாங்க ரொம்ப பிஸி" என்று தலைப்பிட்டது படக்குழு. ஆனால், ஃபர்ஸ்ட் லுக் எதையுமே வெளியிடவில்லை. இன்று அக்டோபர் 29-ம் தேதி திடீரென்று சமூக வலைதளத்தில் 'நாங்க ரொம்ப பிஸி' படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கைப் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

மேலும் இந்த படத்தை பற்றி சுவாரசியமான தகவலையும் வெளியிட்டுள்ளனர்.அது திரையரங்க வெளியீடு அல்லாமல், நேரடியாக சன் நெக்ஸ்ட் ஓடிடியிலும், தீபாவளி அன்று "சன் தொலைக்காட்சியிலும்" ஒளிபரப்பாகவுள்ளது.யோகி பாபு அவரது ட்விட்டர் பக்கத்தில் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளார். இந்த செய்தியை அறிந்து ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Similar News