கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் கோபப்பட்ட நடிகை வனிதா: வைரலாகும் வீடியோ.!

கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் கோபப்பட்ட நடிகை வனிதா: வைரலாகும் வீடியோ.!;

Update: 2020-10-31 15:17 GMT

நடிகை வனிதா விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் கலக்கப்போவது என்று நிகழ்ச்சியில் நடுவராக பணிபுரிந்து வருகிறார். அந்த வகையில் இவர் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் கோபமடைந்து சத்தம் போட கலகலப்பாய் சிரிக்கும் செட்டே அமைதியாகி உள்ளது. அந்த வீடியோவை நிகழ்ச்சி புரோமோவாக விஜய் டிவி சமூக ஊடகங்களில் வெளியிட்டதையடுத்து வைரலாகி வருகிறது.





நடிகை வனிதா தொடர்ந்து சர்ச்சைகளுக்குள்ளாகி வருவகிறார். ஏற்கெனவே இரண்டு திருமணம் செய்து விவாகரத்து பெற்ற வனிதா விஜயகுமாருக்கு 2 மகள்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் சீசன் 3 இந்த நிகழ்ச்சியின் மூலம் மீண்டும் ஊடகங்களின் வெளிச்சத்திற்கு அறிமுகமானார்.

இதனைத் தொடர்ந்து, பீட்டல் பால் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர்களின் திருமணத்தையொட்டி பெரிய சர்ச்சையானது. விரைவிலேயே, அவருடைய திருமணம் கருத்து வேறுபாடுகளால் முடிவுக்கு வந்தது. இதனால் இவரைப் பற்றிய செய்திகள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகின்றன.

மேலும் நிகழ்ச்சியில், ஈரோடு மகேஷ் கேள்விகளை கேட்க, வனிதா கால் மேல் கால் போட்டப்படி அமர்ந்திருக்கிறார். அப்போது அவருக்கு பின்னால் நின்றபடிய விஜய் டிவி பாலா, வனிதாவை கேட்கும் கேள்விக்கெல்லாம் பதில் வனிதாவை கலாய்த்தபடி பதில் அளிக்கிறார்.

ஈரோடு மகேஷ், வனிதாவிடம் நீங்கள் அடிக்கடி போகும் ஃபேவரைட் இடம் எது என கேட்க பின்னால் இருக்கும் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் பங்கேற்கும் பாலா கமிஷனர் ஆபிஸ்தான் என்கிறார்.மேலும் பல கேள்விகளை கேட்டு அவரை அசிங்கப்படுத்தும் விதமாக இருந்தது.

இதனால் வனிதா கோபம் அடைந்து கத்தும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.


Similar News