முன்னணி நடிகரின் மரணத்தால் சோகத்தில் இருக்கும் காமெடி நடிகர் விவேக்.!
முன்னணி நடிகரின் மரணத்தால் சோகத்தில் இருக்கும் காமெடி நடிகர் விவேக்.!
தமிழ் சினிமாவில் கருத்துக்கள் நிறைந்த காமெடிகளாக நம்மிடம் கொண்டு வந்து சேர்ப்பவர் நடிகர் விவேக்.மேலும் காலம் சென்ற அப்துல் கலாம் அவர்களின் வழியை பின்பற்றுபவர். தற்போது விவேக்கை சோகத்தில் ஆழ்த்தியுள்ள சம்பவம் ஜேம்ஸ்பாண்ட பட நடிகரின் மரணம் தான்.
இவர் 1962 இல் ஆரம்பித்து, இதுவரை 24 படங்கள் வந்துள்ளது. 6 நபர்கள் ஜேம்ஸ் பாண்ட் ரோலில் நடித்துள்ளனர். டாக்டர் நோ படத்தில் முதல் முதலாக நடித்தவர் ஷான் கானரி.மேலும் ரஷ்யா வித் லவ், கோல்டுஃபிங்கர், யு ஒன்லி லிவ் ட்வைஸ் மற்றும்டைமண்ட்ஸ் ஆர் ஃபார்எவர் ஆகிய படங்களில் ஜேம்ஸ் பாண்டாக நடித்தார். 50 ஆண்டுகளுக்கு மேலாக படத்தில் நடித்து சில படங்களுக்கு ஆஸ்கார் விருதுகளை பெற்றுள்ளார்.
தற்போது பஹாமாஸில் குடும்பத்துடன் வசித்து வந்தார். அவரின் உயிர் தூக்கத்திலேயே பிரிந்ததாக மகன் தெரிவித்துள்ளார். 90 வயதில் அவர் காலமானார்.ஜேம்ஸ் பாண்ட் என்ற ரோலுக்கு உருவத்தையும் ஸ்டைலயும் கொடுத்தவர் என்ற பெருமை இவருக்கு உண்டு. இவரது மறைவிற்கு பலரும் அவர்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.