ஆந்தாலஜி படத்தில் இணையும் நான்கு முக்கிய இயக்குனர்கள்.!

ஆந்தாலஜி படத்தில் இணையும் நான்கு முக்கிய இயக்குனர்கள்.!;

Update: 2020-11-02 15:17 GMT

கொரோனா வைரஸ் தளர்வுகள் காரணமாக படப்பிடிப்புகள் தொடங்க அனுமதிக்கப்பட்டாலும், முன்னணி இயக்குனர்களின் திரைப்படம் தயாரிப்பதை விட OTT-யில் ஆந்தாலஜி திரைப்படங்களை இயக்குவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.













ஏற்கனவே ஒரு சில முன்னணி இயக்குனர்கள் இயக்கிய ஆந்தாலஜி திரைப்படங்கள் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றதை அடுத்து அஜித், விஜய் படங்களை இயக்கிய இயக்குனர்கள் கூட தற்போது ஆந்தாலஜி பக்கம் சென்று உள்ளனர் என்பதுகுறிப்பிடத்தக்கது. அந்தவகையில் மேலும் 4 இயக்குனர்கள் ஆந்தாலஜி படத்தை எடுக்க முடிவு செய்துள்ளனர்.

இந்திரைப்படத்திற்கு "விக்டிம்" என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. படத்தை ரஞ்சித், வெங்கட்பிரபு, சிம்புதேவன் மற்றும் எம்.ராஜேஷ் ஆகிய 4 பேர் இணைந்து இயக்க உள்ளதாகவும், இந்த திரைப்படத்தில் நடிக்கும் நடிகர் நடிகையர் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்பு இன்னும் ஒரு சில நாட்களில் வெளிவரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நவம்பர் 10ஆம் தேதி தியேட்டர்கள் திறக்க அனுமதி தந்த நிலையில் பல படங்கள் தியேட்டரில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Similar News