மூக்குத்தி அம்மன் திரைப்படத்தின் முதல் வீடியோ பாடல் ரிலீஸ்.!

மூக்குத்தி அம்மன் திரைப்படத்தின் முதல் வீடியோ பாடல் ரிலீஸ்.!;

Update: 2020-11-03 15:48 GMT

கொரோனா ஊரடங்குக்கு முன்னதாக ஆர். ஜே. பாலாஜி இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் உருவாகி இருக்கும் படம் 'மூக்குத்தி அம்மன்'. கொரோனா வைரஸ் பிரச்சனையால் தியேட்டர்கள் எல்லாம் மாதக் கணக்கில் மூடப்பட்டுள்ளதால் படங்களை OTT தளத்தில் வெளியிட்டு வருகிறார்கள்.இந்நிலையில் மூக்குத்தி அம்மன் தீபாவளி பண்டிகை ஸ்பெஷலாக 'டிஸ்னி ஹாட்ஸ்டாரில்' வெளியாகவிருப்பதாக ஆர்.ஜே. பாலாஜி தெரிவித்துள்ளார்.

இந்தப் படத்தை ஆர்.ஜே.பாலாஜியுடன் இணைந்து என்.ஜே.சரவணனும் இயக்குநர் இருவரும் இப்படத்தை பொறுப்பேற்று இயக்குகிறார்கள். மேலும் ஒளிப்பதிவாளராக தினேஷ் கிருஷ்ணன், இசையமைப்பாளராக கிரிஷ் கோபாலகிருஷ்ணன், சண்டை இயக்குநராக ஸ்டண்ட் சில்வா, எடிட்டராக ஆர்.கே.செல்வா ஆகியோர் பணிபுரிகின்றனர் .இந்தப் படத்தையும் வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்துள்ளது.

இந்நிலையில் இப்படத்தின் முதல் வீடியோ பாடலான 'ஆடி குத்து' என்ற முதல் சிங்கள் பாடல் youtupe-ல் வெளியாகி உள்ளது. இதற்கு ரசிகர்கள் அனைவரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

Similar News