நடிகர் சிம்புவிற்கு நன்றி கூறிய காமெடி நடிகர்.!
நடிகர் சிம்புவிற்கு நன்றி கூறிய காமெடி நடிகர்.!;
இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் மாதவ் மீடியா நிறுவனம் தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம் "ஈஸ்வரன்". சிம்பு ஹீரோவாக நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு திண்டுக்கல்லை சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்று வருகிறது. அப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நிதி அகர்வால் நடிக்கிறார்.
மேலும் கிராமத்து பின்னணியில் உருவாகும் இப்படத்தில் பாரதிராஜா, மனோஜ், நந்திதா,பால சரவணன், முனீஸ்காந்த்,யோகி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளனர். இந்நிலையில் ஈஸ்வரன் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதில் சிம்பு முழுவதும் உடல்எடையை குறைத்து நடித்துள்ளார்.
மேலும் இப்படத்தின் ஷூட்டிங்கில் பிரபல காமெடி நடிகர் பாலசரவணன் பிறந்தநாள் ஈஸ்வரன் படப்பிடிப்பில் கொண்டாடப்பட்டது.இதில் கலந்து கொண்ட சிம்பு அவருக்கு கேக்கினை ஊட்டியும், வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.
இதற்கு நன்றி தெரிவித்த பால சரவணன் அவரது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பது:அத்தனை அன்பையும் அள்ளி தந்து அன்பளிப்பும் தந்து என்றும் மறக்க முடியாத நாளாக இப்பிறந்நாளை மாற்றியதற்கு அன்பு SilambarasanTR_ Brotherக்கு மனமார்ந்த நன்றிகள் பல மாபெரும் வாய்ப்பளித்து இவ்வினிய தருணத்திற்கு காரணமான அன்பு இயக்குனர் சுசீந்திரன் சாருக்கு மனமார்ந்த நன்றிகள் பல என்று அவர் பதிவிட்டிருக்கிறார். இதை பார்த்து ரசிகர்கள் அனைவரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.