பிக்பாஸில் சுரேஷிற்கு எதிராக மாறிய பாலா : அதிர்ச்சியில் போட்டியாளர்கள்.!

பிக்பாஸில் சுரேஷிற்கு எதிராக மாறிய பாலா : அதிர்ச்சியில் போட்டியாளர்கள்.!;

Update: 2020-11-03 17:02 GMT

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பாலாவிடம் சண்டை போடாத நபர்களே இல்லை அந்த வகையில் இன்று வந்த இரண்டாவது ப்ரோமோவில் பாலா விற்கும் சுரேஷ் இருக்கும் வாக்குவாதம் நடப்பது போல் தோன்றுகிறது.

மேலும் பிக்பாஸில் பரபரப்புக்கும், சண்டைக்கும் பஞ்சமில்லாமல் சென்று கொண்டிருக்கிறது.கடந்த வாரம் வேல்முருகன் வெளியேறிய நிலையில் சுசித்ரா வீட்டுக்குள் நுழைந்திருப்பது கலவரத்தை கூட்டியுள்ளது.ஆரி,சனம் ஆகிய இருவரும் வெளிப்படையாக பேசிய அவர்களது கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள இரண்டாவது ப்ரோமோவில் விவாத மேடை போட்டியில் சுரேஷ் புகாருக்கு எதிராக ஷனம் பதில் கூறுகிறார்.அதில் ஷனத்திற்கு ஆதரவாக பாலா,ஆரி,ரம்யா ஆகியோர் நிற்க, சுரேஷுக்கு ஆதரவாக ஷிவானி,ரியோ, அர்ச்சனா,சம்யுக்தா ஆகியோர் நிற்கின்றனர். இதில் பாலா ஷனத்திற்கு ஆதரவாக பேசுகிறார் என்பதுபோல் ப்ரோமோ அமைந்தது.

அதன் பிறகு அர்ச்சனா, சம்யுக்தா பாலாவிடம் ஷனத்திற்கு நீங்க ஆதரவாக பேசுனது உங்கள சப்போர்ட் பண்ணவங்கல முட்டாள்னு நெனைக்க தோணுது என்று கூறுகிறார்.அதற்கு பாலா தோல்வியடைய போறவங்கள ஜெயிக்கவைக்குறது தான் கெத்து என்று கூறும் படியாக இருந்தது அவர் பேசியதை பார்த்து போட்டியாளர்கள் யார் இதில் முட்டாள்கள் என்று யோசிக்கும் வகையில் இருக்கிறது.இவ்வாறாக ப்ரோமோ முடிவுக்கு வந்தது.

Similar News