உலகத் தரத்தில் சினிமா தொழில்நுட்ப பயிற்சி மையம் அமைக்க மத்திய அரசு திட்டம் ! - எல்.முருகன் !

Update: 2021-10-09 07:15 GMT

உலகத் தரத்தில் சினிமா தொழில்நுட்ப பயிற்சி மையம் அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுருப்பதாக மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.



தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை நிர்வாகிகள் மற்றும் தயாரிப்பாளர்கள் ஆகியோரின் கூட்டு ஆலோசனை கூட்டம் பிலிம் சேம்பர் வளாகத்தில் நேற்று நடந்தது. இதில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கலந்து கொண்டு அவர்களின் கேரிக்கைகள் ஏற்று பேசினார். அப்போது அவர் கூறியதாவது, "திரைப்படத்துறையினரின் கோரிக்கைக்கு தீர்வு காண அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய அரசு எடுக்கும். சினிமா படப்பிடிப்புகளுக்கு பல்வேறு துறைகளிடம் எங்கு அனுமதி பெறுவது என்பது பற்றிய விவரங்கள் அடங்கிய இணையதளம் அமைச்சகத்தின் சார்பில் ஏற்கனவே தொடங்கப்பட்டு உள்ளது.




 


இந்த புதிய இணையதளம் தயாரிப்பாளர்கள், இந்தியாவில் எந்த பகுதியிலும் படப்பிடிப்பு நடத்த ஆன்லைன் மூலம் அனுமதி பெறுவதற்கு வகை செய்வதோடு, தொழில் புரிவதை எளிமையாக்குவதை உறுதி செய்யும். அனிமேஷன் தொழில்நுட்பம் வி.எப்.எக்ஸ் தொழில்நுட்பத்தை பயில உலக தரத்திலான கல்வி நிறுவனம் ஒன்றை ஏற்படுத்த மும்பை ஐ.ஐ.டி.யுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளது" என கூறினார்.

Twitter

Tags:    

Similar News