ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ் உதவியால் திரையில் மீண்டும் விவேக் !

Cinema News.;

twitter-grey
Update: 2021-08-24 10:15 GMT
ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ் உதவியால் திரையில் மீண்டும் விவேக் !

சின்னக் கலைவாணர் விவேக் நவீன தொழில்நுட்பத்தின் மூலம் மீண்டும் திரையில் தோன்றவிருக்கிறார்.




 


நகைச்சுவை நடிகர் விவேக் இறந்த காரணத்தினால் அவர் பாதியில் நடித்து விட்ட படங்கள் அப்படியே நிற்கிறது. அதில் ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2, இயக்குனர்கள் ஜேடி-ஜெர்ரி இயக்கத்தில் பெயரிடப்படாத படமும் அடங்கும்.




 


இதில் சென்னையில் பிரபலமான சரவணா ஸ்டோர் அதிபர் நடிக்கும் படத்தை ஜெடி-ஜெர்ரி இரட்டையர்கள் இயக்கி வருகிறார்கள். ஊர்வசி ரவுட்லா, பிரபு நடிக்கும் இந்த படத்தில் சரவணா ஸ்டோர்ஸ் அதிபரின் நண்பராக விவேக் நடித்து வந்தார். இதனால் படம் முழுக்க அவர் அண்ணாச்சியுடன் வரும் காட்சிகள் இடம் பெறுகிறது. 70 சதவிகித படப்பிடிப்புகள் முடிவடைந்த நிலையில் விவேக் மரணம் அடைந்து விட்டதால், விவேக் கேரக்டரை நவீன தொழில்நுட்பத்தின் உதவியுடன் உருவாக்கி வருகிறார்கள். விவேக்கின் சாயல் கொண்ட ஒருவரை நடிக்க வைத்து, பின்னர் அதனை நவீன தொழில்நுட்பத்தின் உதவியுடன் அதை விவேக் கேரக்டராக மறு உருவாக்கம் செய்கிறார்கள். இதனால் மீண்டும் சின்னக் கலைவாணர் நம் கண் முன்னே திரையில் தோன்றுவார்.

Tags:    

Similar News