இரண்டு மெகா படங்கள் மூலம் அடுத்த ஆண்டு கலக்கப்போகும் அல்லு அர்ஜுன் !
Cinema News.;
2022'ம் ஆண்டில் இரண்டு படங்கள் மூலம் ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தரவிருக்கிறார் அல்லு அர்ஜுன்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக திரையுலகம் கொரோனோ காரணமாக முடங்கி கிடந்தது. பெரிய படங்கள் படப்பிடிப்பு கூட நடைபெறவில்லை, வெளியீட்டு தேதிகள் பற்றிய அறிவிப்பை தயாரிப்பு நிறுவனங்கள் வெளியிட தயங்கினர். ஆனால் தற்பொழுது இந்திய அரசின் போர்க்கால தடுப்பூசி நடவடிக்கையால் திரையுலகம் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது.
தெலுங்கு திரையுலகின் முக்கிய கதாநாயகன் அல்லு அர்ஜுன் அடுத்த 2022'ம் ஆண்டு தனது ரசிகர்களுக்கு இரண்டு பெரிய படங்கள் மூலம் கொண்டாட்டம் தரவிருக்கிறார். ஒன்று 'புஷ்பா' முதல் பாகம், மற்றொன்று போயப்பட்டி ஸ்ரீனு டைரக்ஷனிலும் நடிக்க இருக்கும் பிரம்மாண்ட படம். இதனால் அல்லு அர்ஜுன் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.