கமலிடம் நலம் விசாரித்த நடிகர் ரஜினிகாந்த்!
நடிகர் ரஜினிகாந்த் தொலைபேசி மூலம் கமல்ஹாசனை தொடர்பு கொண்டு உடல் நலம் பற்றி விசாரித்துள்ளார். இது பற்றிய தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது.
நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சென்னை, போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். சமீபத்தில் அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொண்ட நடிகர் கமல்ஹாசன் மீண்டும் நாடு திரும்பியுள்ளார். அப்போது அவருக்கு இருமல் இருந்தாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து அவர் கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொண்டதில் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.
இதனை தொடர்ந்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை மேற்கொண்டு வருகின்றார். அவருக்கு திரைத்துறையினர் குணமடைய வேண்டி பலரும் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.
இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் தொலைபேசி மூலம் கமல்ஹாசனை தொடர்பு கொண்டு உடல் நலம் பற்றி விசாரித்துள்ளார். இது பற்றிய தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது.
Source: Maalaimalar
Image Courtesy: The News Minute