"துப்பறிவாளன் 2" படத்தின் படப்பிடிப்பு துவக்கம் பற்றி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார் விஷால்.
இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் உருவானது விஷால் நடித்த "துப்பறிவாளன்", ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இப்படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்குனர் மிஷ்கின் துவங்கினார். விஷால், மிஷ்கின் இடையே ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக படம் துவங்காமல் தள்ளிப்போனது. இயக்குனர் மிஷ்கினும் படத்தில் இருந்து விலகினார்.
இந்நிலையில் துப்பறிவாளன் 2 படத்தின் கதையில் சில மாற்றம் செய்து வரும் விஷால், 2022 ஏப்ரல் முதல் படப்பிடிப்பை லண்டனில் துவங்க போவதாக அறிவித்துள்ளார். நீரவ் ஷா ஒளிப்பதிவை கவனிக்க, இளையராஜா இசையமைக்க உள்ளார் என விஷால் வெளியிட்ட போஸ்டர் மூலம் தெரிகிறது.