தீர்ந்ததா இம்சை அரசன் பிரச்சினை? தயாரிப்பாளர் சங்கம் வெளியிட்ட அறிக்கை!
Cinema News.
இம்சை அரசன் இரண்டாம் பாகத்தில் துவங்கி ஷங்கர் - வடிவேலு பிரச்சனை தீர்ந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இயக்குனர் ஷங்கர் இம்சை அரசன் 23ம் புலிகேசி இரண்டாம் பாகத்தை இம்சை அரசன் 24ம் புலிகேசி என்ற பெயரில் தயாரித்தார். இப்படத்தை சிம்பு தேவன் இயக்கினார். வடிவேலு நாயகனாக படம் துவங்கியது.
ஆனால் இடையில் இயக்குனருக்கும், வடிவேலுவுக்கும் ஏற்பட்ட பிரச்னையால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. இதனால் பல கோடிகளை இழந்ததாக கூறிய ஷங்கர், தயாரிப்பாளர் சங்கத்தில் வடிவேலு மீது புகார் கொடுத்தார். புகாரின் அடிப்படையில் வடிவேலு தொடர்ந்து நடிக்க முடியாமல் இருந்தது.
தற்போது இப்பிரச்னையை பேசி சுமூகமாக முடித்துள்ளனர். இதுகுறித்து தயாரிப்பாளர் சங்கத்தின் அறிக்கை, "தமிழ் திரைப்படதயாரிப்பாளர் சங்கத்தில் உறுப்பினராக உள்ள ஷங்கர், 23ம் புலிகேசி -2 படத்தில் நடித்த வடிவேலு மீது புகார் அளித்திருந்தார். மேற்படி புகார் சம்பந்தமாக வடிவேலு மற்றும் ஷங்கரிடம் சங்க நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்தி, சுமூகமாக தீர்வு கண்டுள்ளனர்" இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.