கோப்ரா ரசிகர்களை கண்டிப்பாக ஏமாற்றாது - விக்ரமின் நம்பிக்கை

'கோப்ரா படம் கண்டிப்பாக மிஸ் ஆகாது' என விக்ரம் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Update: 2022-08-20 02:10 GMT

'கோப்ரா படம் கண்டிப்பாக மிஸ் ஆகாது' என விக்ரம் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.


 



அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் பல வேடங்களில் நடித்துள்ள கோப்ரா படம் நீண்ட நாட்களாக தயாரிப்பில் இருந்து தற்பொழுது வெளியாக இருக்கிறது இந்த படம் குறித்து விக்ரம் ரசிகர்கள் மத்தியில் ட்விட்டர் ஸ்பெஸில் பேசினார்.




 

விக்ரம் ரசிகர்களிடம் கூறும்பொழுது, 'கோப்ரா படத்தில் ஏழு வித்தியாசமான வேடத்தில் நான் நடித்துள்ளேன். இது கதைக்கு தேவையானதாக இருக்குமே தவிர திணிக்கப்பட்டதாக இருக்காது. இந்த படத்திற்காக நீண்ட காலமாக ரசிகர்கள் காத்திருக்கிறார்கள், இந்த முறை மிஸ் ஆகாது நிச்சயம் திரையரங்குகளில் வரும். அடுத்து பொன்னியின் செல்வன் வெளியாகிறது' என குறிப்பிட்டார்.

Similar News