ஒரு கோடி பார்வையாளர்களை நெருங்கும் கோப்ரா ட்ரைலர் - ரசிகர்களை ஈர்த்த கணக்கு வாத்தியார்

விக்ரமின் 'கோப்ரா' டிரைலர் வெளியாகி ஒரு கோடி பார்வையாளர்களை நெருங்கி வருகிறது.

Update: 2022-08-26 13:57 GMT

விக்ரமின் 'கோப்ரா' டிரைலர் வெளியாகி ஒரு கோடி பார்வையாளர்களை நெருங்கி வருகிறது.

டிமான்டி காலனி, இமைக்கா நொடிகள் உள்ளிட்ட படங்களை இயக்கிய அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடித்திருக்கும் படம் 'கோப்ரா'. பிரம்மாண்டமாக தயாராக உள்ள இப்படத்தின் டிரைலர் நேற்று மாலை வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்று வருகிறது.

இப்படத்தில் பல விதமான கெட்டப்புகளில் விக்ரம் நடித்துள்ளார். இப்படத்தின் ட்ரெய்லர் நேற்று மாலை வெளியானதில் இருந்து ரசிகர்களை ஈர்த்து வருகிறது. மேலும் யூ டியூபில் இப்படத்தின் ட்ரைலர் ஒரு கோடி பார்வையாளர்களை நெருங்கி வருகிறது. 

Similar News