விக்ரமுக்கு ஏமாற்றம் தந்த 'கோப்ரா' - நீளம் குறைத்தும் ரசிகர்களை கவரவில்லை

விக்ரம் நடித்த வெளியான 'கோப்ரா' திரைப்படம் எதிர்பார்த்த அளவு வசூலை பெறவில்லை என்பதால் பட குழுவினர் அதிருப்தியில் உள்ளனர்.

Update: 2022-09-04 14:03 GMT

விக்ரம் நடித்த வெளியான 'கோப்ரா' திரைப்படம் எதிர்பார்த்த அளவு வசூலை பெறவில்லை என்பதால் பட குழுவினர் அதிருப்தியில் உள்ளனர்.




 

விக்ரம் நடிப்பில் கடந்த சில ஆண்டுகளாக வெளியான ஸ்கெட்ச், சாமி 2, கடாரம் கொண்டான், மகான் போன்ற படங்கள் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. இந்நிலையில் இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் வெளியான கோப்ரா திரைப்படம் கண்டிப்பாக வெற்றி பெறும் என படக்குழுவினர் நம்பி வந்தனர்.




 

இந்த சூழலில் வெளியான கோப்ரா திரைப்படம் முதல் நாளில் ஒன்பது கோடி ரூபாய் வசூலித்தது. அடுத்தடுத்து வரும் நாட்களில் வசூல் குறைந்தது மேலும் பணத்தின் நீளத்தையும் குறைத்த படக்குழுவினர் அதன் பிறகு வசூல் எகிறும் என எதிர்பார்த்த நிலையில் எதிர்பார்த்த நிலையில் அப்பொழுதும் வசூல் குறைந்து என்ற தகவலால் மிகுந்த அதிருப்தியில் உள்ளனர்.  

Similar News