'இங்க வந்து சும்மா இருடா மச்சி' - சந்தானத்தை கலாய்த்த ஆர்யா
மீண்டும் காமெடி நடிகராக உருவாக இருக்கிறார் சந்தானம்.
மீண்டும் காமெடி நடிகராக உருவாக இருக்கிறார் சந்தானம்.
தமிழ் சினிமாவில் வடிவேலுக்கு அடுத்தபடியாக காமெடி நாயகர்களுக்கு வெற்றிடம் உருவாகவே அந்த இடத்தை நிரம்பியவர் சந்தானம். மிகவும் குறுகிய காலத்தில் தமிழ் சினிமாவின் முதன்மை காமெடி நடிகராக உயர்ந்து ஒரு கட்டத்தில் ஹீரோவாக உருவெடுத்து பின் காமெடியாக நடிப்பதை முழுமையாக தவிர்த்து வந்தார். ஆனால் தற்பொழுது மீண்டும் காமெடி கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார்.
ஆர்யா நடித்துள்ள கேப்டன் படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சி கலந்து கொண்ட சந்தானம் பேசியதாவது, 'முதலில் ஆர்யா இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கேட்ட என்ன செய்து கொண்டிருக்கிறாய்? என கேட்டதற்கு வீட்டில் சும்மாதான் இருக்கிறேன் என கூறினேன் அதற்குரிய இங்கே வந்து சும்மா இருந்துட்டு போக சொல்லி பேசினார்' அந்த வகையில் பாஸ் என்கிற பாஸ்கரன் 2 படத்தில் காமெடி கதாபாத்திரத்தில் சந்தானம் நடிக்க இருப்பது உறுதியாகியுள்ளது.