நீண்ட இடைவெளிக்கு பிறகு கதாநாயகனாக நகைச்சுவை நடிகர்

பிரபல நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிகர் சின்னி ஜெயந்த் ஒரு படத்தில் கதாநாயகனாக நடிக்க உள்ளார்.

Update: 2023-09-29 15:00 GMT

பிரபல நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிகர் சின்னிஜெயந்த் தற்போது ஆறு புதிய படங்களில் நடித்து வருகிறார் . ஜெய் தினாவுடன் 'நடிகன் பிரம் அருப்புக்கோட்டை' என்ற படத்தில் கமலஹாசன் ரசிகராக வருகிறார் . இந்த படத்தை நாதிர்ஷா டைரக்டர் செய்கிறார். மலையாளத்தில் வெளியாக வெற்றி பெற்ற 'கட்டப்பனையிலேயே ஹிருத்திக் ரோஷன்' என்ற படத்தின் தமிழ் ரீமேக்காக இது உருவாகிறது. சசி இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண் நடிக்கும் 100 கோடி வானவில் படத்திலும் நடிக்கிறார்.


ஆர்.கே பாலாஜியுடன் சிங்கப்பூர் சலூன்,நரேன்  கார்த்திக் இயக்கத்தில்  அதர்வா, சரத்குமாருடன் 'மூன்று நிறங்கள் ' படங்களிலும் நடிக்கிறார். இந்த நிலையில் அடுத்து காந்தாரா படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றிய சித்திரஜா டைரக்டர் செய்யும் படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். மூன்று வயது குழந்தையை மையமாக வைத்து இந்த படம் உருவாகிறது . இதில் டிரைவராக சின்னிஜெயந்த் ஜெயந்த் வருகிறார். அவரது நண்பன் கதாபாத்திரத்தில் வையாபுரி நடிக்கிறார். படத்துக்கு 'பிள்ளைத்தமிழ் பாடுகிறேன்' என்று பெயர் வைத்துள்ளனர்.


SOURCE :DAILY THANTHI

Similar News