காமெடி நடிகர் யோகி பாபுவுக்கு அழகான ஆண் குழந்தை.!

காமெடி நடிகர் யோகி பாபுவுக்கு அழகான ஆண் குழந்தை.!

Update: 2020-12-28 17:38 GMT

நடிகர் யோகிபாபு, மஞ்சு பார்கவி தம்பதிக்கு இன்று அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளதால், அவரது குடும்பத்தார் மற்றும் உறவினர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

கடந்த 2009ம் ஆண்டு வெளியான யோகி படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார் யோகிபாபு. அதனைத்தொடர்ந்து அனைத்து முன்னணி நடிகர்களுடன் காமெடியில் கலக்கி வந்தார்.

ஆரம்பத்தில் 35 வயதாகும் யோகிபாபு திருமணம் செய்ய பெண் தேடிக்கொண்டிருந்தார். அவர் எப்போது திருமணம் செய்வார் என்று எல்லோரும் எதிர்பார்த்து வந்த நிலையில், இந்த வருடம் பிப்ரவரி 5ம் தேதி வேலூரைச் சேர்ந்த மஞ்சு பார்கவி என்ற பெண்ணை குலதெய்வ கோயிலில் எளிமையாக திருமணம் செய்தார்.

இத்தம்பதிகளின் வரவேற்பு மார்ச் மாதம் நடைபெறவிருந்த நிலையில் கொரோனா ஊரடங்கு காரணமாக நிறுத்தப்பட்டது. இந்நிலையில், தற்போது யோகிபாபு மஞ்சு பார்கவி தம்பதியினருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதனையடுத்து அவருக்கு பலர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Similar News