பாவக்கதை நடிகரை நேரில் அழைத்து பாராட்டிய தளபதி விஜய்!
பாவக்கதை நடிகரை நேரில் அழைத்து பாராட்டிய தளபதி விஜய்!;
கொரோனா காரணமாக தியேட்டர்கள் மூடப்பட்டதினால் பல படங்கள் OTT-வெளியானது. அந்த வகையில் ஆந்தாலஜி திரைப்படமான "பாவக்கதைகள்" நல்ல வரவேற்பை பெற்றது. சுதா கொங்காரா இயக்கிய தங்கம், விக்னேஷ் சிவன் இயக்கிய லவ் பண்ண உட்றனும், கௌதம் மேனன் இயக்கிய வான்மகள் மற்றும் வெற்றிமாறன் இயக்கிய ஓர் இரவு ஆகிய நான்கு பகுதிகளும் சிறப்பாக இருந்ததாக ரசிகர்கள் பாராட்டு தெரிவித்தனர்.
இந்த நிலையில் 'பாவக்கதைகள்' ஆந்தாலஜியின் ஒரு பகுதியான சுதா கொங்காரா இயக்கிய "தங்கம்" என்ற பகுதியில் சாந்தனு பாக்யராஜ் மற்றும் காளிராஜ் ஜெயராம் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர். குறிப்பாக காளிராஜ் ஜெயராம் நடித்த திருநங்கை கேரக்டர் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது.
ஏற்கனவே திருநங்கை கேரக்டரில் சூப்பராக நடித்த காளிதாஸ் ஜெயராமுக்கு பாராட்டுக்கள் குவிந்த நிலையில் தற்போது தளபதி விஜய் அவரை நேரில் அழைத்து அவருடைய சிறப்பான நடிப்புக்கு தனது பாராட்டுக்களை தெரிவித்தார். மேலும் இருவரும் இணைந்து எடுத்த புகைப்படமும் தற்போது சமுக வளைத்தளத்தில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
— LetsOTT GLOBAL (@LetsOTT) January 9, 2021