தளபதி விஜயின் அடுத்த படத்தை இயக்குகிறார் - நயன்தாரா பட இயக்குனர்.!

தளபதி விஜயின் அடுத்த படத்தை இயக்குகிறார் - நயன்தாரா பட இயக்குனர்.!;

Update: 2020-11-06 18:10 GMT

தளபதி விஜயின் அடுத்த படத்தை நயன்தாரா நடித்த "கோலமாவு கோகிலா" என்ற வெற்றி படத்தை கொடுத்த இயக்குனர் நெல்சன் திலீப் இயக்குகிறார் என்ற தகவல்கள் வெளியாகி உள்ளது.

நடிகர் விஜய் தற்போது நடித்து முடித்து வெளியாக உள்ள படம் மாஸ்டர்.இப்படத்தின் ரிலீஸ்க்கு  பின்னர் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் விஜயை நடிக்க வைக்க ஒப்பந்தம் செய்திருந்தது. அந்த படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்க இருப்பதாகவும் தகவல் வெளிவந்தது.ஏற்கனவே இவர்கள் இருவரும் கத்தி, துப்பாக்கி, சர்க்கார் ஆகிய வெற்றி படங்களை  கொடுத்தவர்கள்.

இந்நிலையில் 'கோலாமாவு கோகிலா' பட இயக்குநர் நெல்சன் திலீப் குமார் விஜய்யின் அடுத்த படத்தை இயக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.  தற்போது சிவகார்த்திகேயனின் "டாக்டர்" படத்தை இயக்கி வரும் நெல்சன் சன் பிக்சர்ஸ் நிறுவனத்துக்கும், விஜய்க்கும் கதை சொல்லியிருப்பதாகவும், இருதரப்புக்கும் அந்தக் கதை பிடித்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. எனவே இந்தக் கூட்டணி இணைய வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.

Similar News