திடீரென ரசிகர்களை சந்தித்த தளபதி விஜய்: காரணம் என்ன தெரியுமா..?

திடீரென ரசிகர்களை சந்தித்த தளபதி விஜய்: காரணம் என்ன தெரியுமா..?;

Update: 2021-02-06 19:00 GMT

தளபதி விஜய் நடித்து முடித்து வெளிவந்த படம் மாஸ்டர் படம். கொரோனா ஊரடங்கிற்கு பின்பு தியேட்டர்களில் ரிலீஸான முதல் படம் மாஸ்டர்.இப்படம் கடந்த 13-ஆம் தேதி பொங்கல் தின விருந்தாக தமிழகம் உள்பட உலகம் முழுவதும் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பதும், வசூலிலும் சாதனை செய்து வருகிறது.மாஸ்டர் படம் வெளியான பத்து நாளில் 200 கோடிக்கு மேல் வசூல் சாதனையும் படைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் இவர் நடிப்பது மட்டுமில்லாமல், அவ்வப்போது ரசிகர்களையும் நேரில் சந்தித்து வருகிறார்.இந்த நிலையில் இன்று தளபதி விஜய் பனையூரில் உள்ள அவருடைய வீட்டில் ரசிகர்களை சந்திக்க திட்டமிட்டுள்ளார். இதனையடுத்து அவர் பனையூருக்கு ரசிகர்களை சந்திக்க காரில் வரும் காட்சியின் வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.

இன்று ரசிகர்களுடன் அவர் முக்கிய ஆலோசனை செய்வார் என்று கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. விஜய் பெயரில் அவரது தந்தை கட்சி தொடங்கி உள்ள நிலையில் அது குறித்து ஏதாவது ஏதேனும் அறிவிப்பு வெளிவருமா அல்லது தேர்தல் நேரம் நெருங்கி விட்டதால் அரசியல் குறித்த அறிவிப்பு வெளிவருமா என்பதை பார்ப்போம்.

Similar News