தளபதி விஜயின் மாஸ்டர் படம் ஓடிடியில் ரிலீஸ்! அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

தளபதி விஜயின் மாஸ்டர் படம் ஓடிடியில் ரிலீஸ்! அதிகாரப்பூர்வ அறிவிப்பு!;

Update: 2021-01-27 22:24 GMT

தளபதி விஜய் நடித்து வெளியான திரைப்படம் மாஸ்டர். இப்படம் பொங்கல் விருந்தாக கடந்த ஜனவரி 13-ஆம் தேதி தியேட்டரில் வெளியானது.இப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றதோடு குடும்ப ஆடியன்ஸ்களையும் ஒரு வருடத்திற்கு பின்னர் திரையரங்குகளுக்கு வரவழைத்தது. மாஸ்டர் திரைப்படம் வெளியான 10 நாட்களில் 200 கோடிக்கு மேல் வசூல் சாதனையும் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது வந்த தகவலின்படி 'மாஸ்டர்' திரைப்படம் அமேசான் பிரைம் OTT-யில் வரும் 29-ஆம் தேதி வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மாஸ்டர் திரைப்படம் வெளியாகி 16 நாட்களில் OTT-யில் வெளியாக இருப்பது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் மாஸ்டர் திரைப்படம் திரையரங்குகளில் இன்னும் நன்றாக ஓடிக்கொண்டிருக்கும்போது OTT-யில் வெளியானால் திரையரங்குகளில் வசூல் பாதிக்கும் என்று தியேட்டர் உரிமையாளர்கள் கூறி வருகின்றனர்.அந்த வகையில்  அமேசான் ப்ரைம் நிறுவனம்  மாஸ்டர் திரைப்படம் வெளியாகும் தேதியை அதிகாரப்பூர்வமாக ட்விட்டர் பக்கத்தில் அறிவித்து உள்ளது.


 

Similar News