பிக்பாஸில் கதறி அழுத போட்டியாளர்!

பிக்பாஸில் கதறி அழுத போட்டியாளர்!;

Update: 2021-01-12 17:41 GMT

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்று 100 நாட்கள் ஆன நிலையில் 99-வது நாளிலிருந்து அர்ச்சனா, நிஷா, ரமேஷ், ரேகா,சம்யுக்தா, சுசித்ரா, ஆஜித், சனம்ஷெட்டி, வேல்முருகன் ஆகியோர்  வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் பிக்பாஸ் வீட்டில் ஷிவானி, சுரேஷ் மற்றும் அனிதா தவிர மீதி அனைவரும் மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்கு சிறப்பு விருந்தினர்களாக திரும்பி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

எனவே பிக்பாஸ் வீட்டில் ரீஎண்ட்ரி ஆன ரேகா உணர்ச்சிவசப்பட்டு தனது தந்தை குறித்து பேசி கதறி அழுத காட்சிகள் இன்றைய மூன்றாம் புரமோ வீடியோவில் உள்ளது. நீங்கள் கடந்து வந்த பாதை என்ற டாஸ்க்கில் நான் ஒரு விஷயத்தை கூறவில்லை.

குறிப்பாக எனது அப்பாவை பற்றி சொல்லவேண்டும் என்று நினைத்தேன். நான் நடிகையாக பிசியாக இருந்த காலத்தில் எனது அம்மா என் கூடவே வந்து இருந்தார்கள். அப்பாவை கவனிக்க ஆளில்லாமல் இருந்தது. அதனால் அவர் உடல் நலக்கோளாறு காரணமாக இறந்துவிட்டார். நான் அவரை சரியாக கவனிக்காததால் தான் அவர் இறந்துவிட்டார் என்ற குற்ற உணர்ச்சி எனக்கு இன்றும் உள்ளது என்று கதறி அழுதவாறு கூறினார்.

அப்போது பாலாஜி உள்பட மற்ற அனைத்து போட்டியாளர்களும் அவரை கட்டி அணைத்து ஆறுதல் கூறினர். இந்த நெகிழ்ச்சியான சம்பவத்தின் காட்சிகள் என்ற மூன்றாவது புரமோவில் இடம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


 

Similar News