பிக்பாஸ்யை கன்ஃப்யூஸ் செய்த போட்டியாளர்: கேலி செய்யும் அனிதா.!
பிக்பாஸ்யை கன்ஃப்யூஸ் செய்த போட்டியாளர்: கேலி செய்யும் அனிதா.!;
பிக்பாஸ் நிகழ்ச்சி 70 நாட்களை தாண்டி வெற்றிகரமாக சென்று கொண்டிருக்கும் வகையில் இன்றைய இரண்டாவது ப்ரோ மொவில் பிக்பாஸையே கன்ஃப்யூஸ் செய்து அவரையே சிரிக்க வைத்தவர் இவர் ஒருவர்தான் என ரம்யாவை அனிதா கேலி செய்வது போல இருந்தது.
கடந்த சில நாட்களாக பிக்பாஸ் கன்பெக்சன் அறைக்கு ஒவ்வொரு போட்டியாளராக அழைத்து இந்த 70 நாள்களில் நீங்கள் இந்த வீட்டில் பெற்ற அனுபவம் என்ன, பிக்பாஸ் வீட்டின் வெளியே நீங்கள் யாரை மிஸ் செய்கிறீர்கள் என்பது குறித்த கேள்வியை கேட்டார்.
ஷிவானி முதல் அர்ச்சனா வரை இந்த கன்பெக்சன் அறைக்கு வந்தவர்கள் எல்லோரும் ஒரு கட்டத்தில் உடைந்து கதறி அழுதார்கள் என்பதும் கண்ணீருடனே வெளியே சென்றார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.ஆனால் சற்றுமுன் கன்பெக்சன் அறைக்கு சென்ற ரம்யா உள்ளேயும் வெளியேயும் சிரித்தபடியே இருந்தது அனைவருக்கும் ஆச்சரியத்தை அளித்துள்ளது.
இந்த பிக்பாஸ் வீட்டில் வாழ்க்கை எப்படி இருந்தது என்று கேட்டபோது எனக்கு யாரிடமாவது பிடிக்கவில்லை என்றால் நான் அவரிடத்தில் இருந்து விலகி கொஞ்சம் டிஸ்டன்ஸ் மெயின்டைன் செய்வேன் என்றும் அதே இடத்தில் இருக்க மாட்டேன் என்றும் ரம்யா கூறினார்.
அதனை அடுத்து எனக்கு எது சரி என்று தோன்றுகிறதோ அந்த நேரத்தில் அதை எல்லாம் பண்ணி கொண்டிருப்பேன் என்றும், இந்த வீட்டில் அழுகையில் உண்மை, பொய் என இரண்டும் பார்க்கலாம் என்றும் கூறினார்.இந்த நிலையில் திடீரென பிக்பாஸ் நான் உங்களிடம் ஒரு கேள்வி கேட்கலாமா என்று கேட்க அதற்கு பிக்பாஸ், நான் கேட்கும் கேள்விக்கு முதலில் பதில் சொல்லுங்கள் என்று கூறுகிறார். இதனை அடுத்து கன்பெக்சன் அறையில் இருந்து சிரித்துக்கொண்டே ரம்யா வெளியே வரும் காட்சியும் அனிதா வரை பார்த்து பிக்பாஸையே கன்ஃப்யூஸ் செய்து அவரையே சிரிக்க வைத்தவர் ரம்யா பாண்டியன் என்று செய்தி வாசிப்பது போல கேலி செய்யும் காட்சியுடனும் இன்றைய 2-வது புரமோ முடிவுக்கு வந்தது.