கோழி பண்ணை டாஸ்க்கில் மோதிக்கொள்ளும் போட்டியாளர்கள்.!

கோழி பண்ணை டாஸ்க்கில் மோதிக்கொள்ளும் போட்டியாளர்கள்.!;

Update: 2020-12-16 13:52 GMT

பிக்பாஸ் வீட்டில் 70 நாட்களை தாண்டி கடந்து கொண்டிருக்கும்  வகையில் பலவிதமான டாஸ்க்குகள் கொடுக்கப்படுகின்றன.கடந்த வாரம் நடைபெற்ற புதிய மனிதா டாஸ்கின் காரணமாக அன்பு குரூப் சுக்குநூறாக உடைந்த நிலையில் இந்த வாரம் கோழிப்பண்ணை டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது.இந்த டாஸ்க்கில் கோழியாக விளையாடுபவர்களின் முட்டையை, நரியாக விளையாடுபவர்கள் தொட வேண்டும்.நேற்று போட்டியாளர்களுக்கே இந்த டாஸ்க் சரியாக புரியாத நிலையில் ஒரு சிலர் வருத்தப்பட்டும், ஒரு சிலர் கோபப்படும் ஆக்ரோஷமாக ஒரு சிலர் வாதம் செய்தும் விளையாடினார்கள்.இந்த நிலையில் இன்று 2-வது நாளாக கோழிப்பண்ணை டாஸ்க்கை ஹவுஸ்மேட்ஸ் விளையாடி வருகின்றனர்.

ஷிவானியின் முட்டையை பாலாஜியை தொட்டுவிட்டதாக இன்றைய முதல் புரோமோவில் கூறுகிறார். அதேபோல் ஆஜித்தின் முட்டையை தொடுவதற்கு ஒரு கூட்டம் முயற்சிக்கின்றது.மேலும் ஆரியிடம் இந்த டாஸ்க் குறித்து அனிதா, ரம்யா மற்றும் அர்ச்சனா ஆகிய 3 பேரும் ஆக்ரோஷமாக வாதம் செய்கின்றனர். அர்ச்சனா தனது முட்டையை காக்க போராடுவதும் அதை பாலாஜி தொட முயற்சிக்கும் காட்சிகளும் புரமோவில் உள்ளது.இறுதியில் அர்ச்சனா தரமான சம்பவம் இருக்கு என்று கூறுவதுடன்  ப்ரோமோ முடிந்தது. இதை பார்த்து ரசிகர்கள் அனைவரும் இன்றைய நிகழ்ச்சியில் பல சுவாரஸ்யமான நிகழ்வுகளும், சண்டைகளும் இருக்கும் என்று கமெண்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.


 

null


 

Similar News