ஃபினாலே டாஸ்க்குகாக வெறித்தனமாக விளையாடும் போட்டியாளர்கள் - வெற்றியாளர் யார்?
ஃபினாலே டாஸ்க்குகாக வெறித்தனமாக விளையாடும் போட்டியாளர்கள் - வெற்றியாளர் யார்?;
பிக்பாஸ் நிகழ்ச்சி முடிவடைய இன்னும் ஒரு வார காலமே இருக்கும் நிலையில் ஃபினாலே டாஸ்க் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே 6-சுற்றுகள் முடிந்துவிட்ட நிலையில் இன்று 7-வது சுற்று நடைபெறுகிறது.
இந்த சுற்றில் போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் மற்ற ஆறு பேர்களுடன் உருண்டு உருண்டு பந்துகளை ஒரு வளையத்தில் இருந்து எடுத்து இன்னொரு வளையத்தில் வைக்க வேண்டும் என்றும், அதன்பின் அனைத்து பந்துகளையும் மீண்டும் முதலில் இருந்த வளையத்தில் வைக்க வேண்டும் என்றும் டாஸ்க் அனைவருக்கும் கொடுக்கப்படுகிறது.
இதில் கடைசியாக முதல் இரண்டு இடங்களுக்கான போட்டியில் பாலாஜி மற்றும் கேபி ஆகியோர் இடையே நடைபெறுவது போல் தெரிகிறது. இதில் கிட்டத்தட்ட இருவருமே ஒரே நேரத்தில் டாஸ்க்கை முடித்ததுபோல் தெரிந்ததால் யார் வெற்றியாளர் என்பதை 3-வது அம்பயர் முடிவு செய்வார் என்று பிக்பாஸ் அறிவிக்கின்றார்.
இந்த சுற்றில் வெற்றி பெற்று 7-புள்ளிகளை எடுக்க போவது பாலாவா அல்லது கேபியா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். கடந்த ஆறு சுற்றுகளிலும் இந்த டாஸ்க்கை சரியாக விளையாடாமல் புள்ளிக்கணக்கில் கடைசி இடத்தில் உள்ள கேபி, இந்த சுற்றில் சிறப்பாக விளையாடி முதல் இரண்டு இடங்களுக்குள் வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதுபற்றிய முழுமையான தகவலை இன்றைய நிகழ்ச்சிகள் காண்போம்.
#Day95 #Promo1 of #BiggBossTamil#பிக்பாஸ் - திங்கள் - வெள்ளி இரவு 10 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason4 #BiggBossTamil4 #VijayTelevision pic.twitter.com/sLhlgQ9t2c
— Vijay Television (@vijaytelevision) January 7, 2021