தேச துரோக வழக்கு.. நடிகை ஆயிஷா சுல்தானாவுக்கு நிபந்தனையுடன் முன்ஜாமின்.!

ஆயிஷா சுல்தானா மீது தேச துரோகம் மற்றும் அரசு மீது வெறுப்பு ஏற்படும் வகையில் பேசுதல் உள்ளிட்ட பிரிவுகளின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.;

Update: 2021-06-18 02:39 GMT

லட்சத்தீவு குறித்து சர்ச்சையான கருத்தை கூறியதாக தொடரப்பட்ட தேச துரோ வழக்கில், நடிகை ஆயிஷா சுல்தானாவுக்கு கேரளா உயர்நீதிமன்றம் முன்ஜாமின் வழங்கியுள்ளது.

இந்தியாவின் யூனியன் பிரதேசமான லட்சத்தீவை சேர்ந்தவரும் திரைப்படம் நடிகையுமான ஆயிஷா சுல்தானா, தினசரி 100 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்படுகிறது. இது தீவுகளில் வசிக்கின்ற மக்களுக்கு எதிராக மத்திய அரசு கையில் எடுத்துள்ள மிகப்பெரிய உயிர் ஆயுதமாக பார்க்கிறேன் என்று மிகவுச் சர்ச்சையான வகையில் கருத்து கூறியிருந்தார்.


 



இதனிடையே லட்சத்தீவின் பாஜக தலைவர் அப்துல் காதர் ஹாஜி கவரத்தி காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். அதன் அடிப்படையில் ஆயிஷா சுல்தானா மீது தேச துரோகம் மற்றும் அரசு மீது வெறுப்பு ஏற்படும் வகையில் பேசுதல் உள்ளிட்ட பிரிவுகளின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்நிலையில், வழக்கில் இருந்து தப்பிக்க கேரள உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமின் கோரி நடிகை ஆயிஷா சுல்தானா மனுதாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் எப்போதெல்லாம் போலீஸ் விசாரணைக்கு அழைக்கிறதோ அப்போது முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் ஒரு வாரகாலத்திற்கு மட்டும் முன்ஜாமின் வழங்கியுள்ளது.

Similar News