கொரோனா சாதாரண நோய் அல்ல.. தயவு செய்து தடுப்பூசி செலுத்திக்கொள்ளுங்கள்.. நடிகர் கவுண்டமணி.!

கொரோனா வைரஸ் ஒரு சாதாரண நோய் அல்ல. எனக்கு முன்னால் மக்கள் இறப்பதை காண்கிறேன் என்று நடிகர் கவுண்டமணி மிகவும் வேதனையுடன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.;

Update: 2021-05-24 11:55 GMT

கொரோனா வைரஸ் ஒரு சாதாரண நோய் அல்ல. எனக்கு முன்னால் மக்கள் இறப்பதை காண்கிறேன் என்று நடிகர் கவுண்டமணி மிகவும் வேதனையுடன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் 2வது அலையால் 3 லட்சத்திற்கும் மேற்பட்டோர்கள் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதே போன்று தினமும் 4 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் உயிரிழந்து வருகின்றனர். அதே போன்று தமிழகத்தில் மட்டும் தினசரி பாதிப்பாக 35 ஆயிரத்தை கடந்து பதிவாகிறது. தினசரி 400க்கும் மேற்பட்டோர்கள் உயிரிழக்கின்றனர்.




 


பல்வேறு மருத்துவமனைகளில் ஆக்சிஜன் படுக்கைள் மற்றும் மருந்துகள் கிடைக்காமல் பலர் உயிரிழக்கின்றனர். இதனை தடுக்கும் விதமாக மத்திய, மாநில அரசுகள் பொதுமுடக்கத்தை அமல்படுத்தி வருகிறது.


 



இந்நிலையில், கொரோனா தொற்று குறித்து நடிகர் கவுண்டமணி ட்விட்டரில் கருத்து பதிவிட்டுள்ளதாவது: "கோவிட் ஒரு சாதாரண நோய் அல்ல. எனக்கு முன்னால் மக்கள் இறப்பதை நான் காண்கிறேன். தயவுசெய்து உள்ளே தங்கி தடுப்பூசி அல்லது ஏதேனும் அவசரநிலைக்கு மட்டும் வெளியே வாருங்கள்" என்று அக்கறையுடன் கோரிக்கை வைத்திருக்கிறார்.

Similar News