நடிகை ரகுல் ப்ரீத் சிங்கிற்கு கொரோனா உறுதி.. கவலையில் ரசிகர்கள்.!

நடிகை ரகுல் ப்ரீத் சிங்கிற்கு கொரோனா உறுதி.. கவலையில் ரசிகர்கள்.!

Update: 2020-12-22 18:42 GMT

ஐதராபாத்தில் “மே டே” படத்தில் நடித்து வந்த பிரபல நடிகை ரகுல் ப்ரீத் சிங்கிற்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: எனக்கு கொரோனா உறுதியானதால் நான் தனிமைபடுத்திக் கொண்டேன். உடல் நலம் நன்றாக உள்ளது.

தற்போது ஓய்வில் உள்ளேன். படப்பிடிப்பில் கலந்து கொள்ள முடியும். என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் பரிசோதனை செய்து கொள்ளுங்கள் எனக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், அவருக்கு ஆறுதல் தெரிவிக்கும் வகையில் அவரது ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். விரைவில் தாங்கள் குணமடைய வேண்டும் என பிரார்த்திப்பதாக ரசிகர்கள் அந்த ட்வீட்டுக்கு கமெண்ட் செய்து வருகிறார்கள்.

அண்மையில் ஐதராபாத்தில் படப்பிடிப்பில் பங்கேற்ற நடிகை தமன்னா மற்றும் நடிகர் சரத் குமாருக்கு கொரோனா உறுதியானது என்பது குறிப்பிடத்தக்கது.
படப்பிடிப்பில் பங்கேற்கும் பலருக்கு கொரோனா பரவி வரும் நிலையில், தற்போது புதிய வகை கொரோனா பரவுவதாக வெளியாகும் தகவல் அதிர்ச்சியளிக்கிறது.
 

Similar News