நடிகர் சூர்யாவுக்கு கொரோனா.. வாழ்க்கை இயல்பு நிலைக்கு திரும்பவில்லை.. பரபரப்பு ட்வீட்.!
நடிகர் சூர்யாவுக்கு கொரோனா.. வாழ்க்கை இயல்பு நிலைக்கு திரும்பவில்லை.. பரபரப்பு ட்வீட்.!;
உலகத்தையை ஆட்டி வைத்த கொரோனா தொற்று இந்தியாவிலும் அதன் கோரத்தாண்டவத்தை ஆடியது என்றே சொல்லலாம். லட்சக்கணக்கான உயிர்களை கொரோனா என்ற கொடிய நோய் பறித்து சென்றது.
தற்போது கொரோனா வைரஸ் தொற்று படிப்படியாக குறைந்து வருகிறது. அதே சமயத்தில் தடுப்பு மருந்தும் கண்டுப்படிக்கப்பட்டு பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தில் அரசியல் பிரமுகர்கள் மற்றும் நடிகர்கள் பொதுமக்கள் என அனைவருமே கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்து வந்துள்ளனர்.
இந்நிலையில், நடிகர் சூர்யாவுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருந்தது தற்போது தெரியவந்துள்ளது. இது பற்றி அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது ‘கொரோனா’ பாதிப்பு ஏற்பட்டு, சிகிச்சை பெற்று நலமுடன் இருக்கிறேன்.
வாழ்க்கை இன்னும் இயல்பு நிலைக்கு திரும்பவில்லை என்பதை அனைவரும் உணர்வோம். அச்சத்துடன் முடங்கிவிட முடியாது. அதேநேரம் பாதுகாப்பும், கவனமும் அவசியம். அர்ப்பணிப்புடன் துணைநிற்கும் மருத்துவர்களுக்கு அன்பும், நன்றிகளும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
அவர் குறிப்பிட்டுள்ளதை போன்று அனைவரும் மிகுந்த எச்சரிக்கையுடன் பயணிக்க வேண்டியது உள்ளது. தடுப்பு மருந்துகள் அனைவருக்கும் செலுத்தும்வரை தனி மனித இடைவெளியை கடைப்பிடித்து நடந்தால் எளிதில் கொரோனா என்ற கொடிய நோயை விரட்டி அடிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.