'சாம்ராட் பிரித்திவிராஜ்' படத்தை தடை விதித்த அரபு நாடுகள் - ஏன்?

சமீபத்தில் வெளிவந்த அக்ஷய் குமார் நடித்த 'சாம்ராட் பிரித்திவிராஜ்' படங்களை வெளியிட குவைத், ஓமன், கத்தார் போன்ற நாடுகள் தடை விதித்துள்ளன.

Update: 2022-06-04 08:15 GMT

சமீபத்தில் வெளிவந்த அக்ஷய் குமார் நடித்த 'சாம்ராட் பிரித்திவிராஜ்' படங்களை வெளியிட குவைத், ஓமன், கத்தார் போன்ற நாடுகள் தடை விதித்துள்ளன.




இயக்குனர் சந்திரபிரகாஷ் திவேதி இயக்கத்தில் அக்ஷய் குமார், சஞ்சய் தத் உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் 'சாம்ராட் பிரித்திவிராஜ்', முகலாய மன்னன் முகமது கோரி யிடம் இருந்து நாட்டை காக்க போராடிய மன்னர் பிரிதிவிராஜ் சவுகான் வீரத்தை பறைசாற்றும் விதமாக இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது.




இந்நிலையில் இப்படத்திற்கு குவைத், கத்தார் மற்றும் ஓமன் நாடுகளில் தடை விதிக்கப்பட்டுள்ளது. புகழ்பெற்ற இந்து சாம்ராட் பிரித்திவிராஜ் வாழ்க்கையை அடிப்படையாக கொண்ட ஒரு படம் அரபு நாடுகளில் தடை செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Similar News