கிரிக்கெட் வீரர் 'விராட் கோலி' நடிகை 'தமன்னா' ஆகியோருக்கு நீதிமன்றம் நோட்டீஸ்..!

கிரிக்கெட் வீரர் 'விராட் கோலி' நடிகை 'தமன்னா' ஆகியோருக்கு நீதிமன்றம் நோட்டீஸ்..!;

Update: 2020-11-05 17:38 GMT

ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்யக் கோரியும் அந்த விளம்பரத்தில் நடித்த தமன்னா மற்றும் இந்திய கிரிக்கெட் வீரரான விராட் கோலி மீது  போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. தமிழகத்தில் லாட்டரி சீட்டுகள், ரம்மி ஆகிவற்றை தடை செய்ய வேண்டுமென்று அரசு ஏற்கனவே கூறியிருக்கிறது. இது நடுத்தர மக்களின் வாழ்க்கையை கருத்தில் கொண்டு எடுக்கப்பட்ட முடிவாகும்.

 இந்த கொரோனா  ஊரடங்கினால் வீட்டில் இருக்கும் மக்கள் ஆன்லைன் சூதாட்டத்திற்கு அடிமையாகி இருக்கின்றனர். தற்போதும் ஆன்லைனில் பல ஏராளமான சூதாட்ட கேம்கள் வந்துகொண்டே இருக்கின்றன. இதற்கு மக்கள் தங்களின் பணத்தை செலவு பண்ணி விளையாடி  வருகின்றனர். மேலும் இவ்வாறு பிரச்சினைகள் வர ஆன்லைன் சூதாட்ட விளம்பரங்களில்  பல பெரிய பிரபலங்களும்,கிரிக்கெட் வீரர்களும் அந்த விளம்பரங்களில் நடித்து வருவது அவர்களுக்கு ஒரு நம்பகத் தன்மையை ஏற்படுத்தி இருக்கிறது.
 

மேலும் இவர்கள் இருவர்கள்  மீதும்  மதுரைக் கிளை உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டை தடை செய்ய வேண்டும் என்றும் மதுரையைச் சேர்ந்த முகமது ரஸ்வி என்பவர் வழக்கு தாக்கல் தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த புகழேந்தி,கிருபாகரன் ஆகிய நீதிபதிகள் விளம்பரம் செய்யும் பிரபலமானவர்களில் பலர் பொதுமக்களின் நலனைக் கருத்தில் கொள்ளாமல் அவரவர் பாக்கெட்டுகளை நிரப்புவதில் கவனம் செலுத்துகின்றனர் என கோபமாக கூறினார்.

அதனையடுத்து இந்த வழக்கில், மத்திய,மாநில அரசுகள், கிரிக்கெட் வீரர்கள் விராட் கோலி, கங்குலி, ரானா, நடிகை தமன்னா ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு வழக்கை நவம்பர் 19-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர். இதில் பங்கேற்ற பல பிரபலங்கள் சிக்குவார்களா என பார்ப்போம்.

Similar News