பூரணமாக குணமாகி சென்னை திரும்பும் டி.ராஜேந்தர்

அமெரிக்காவில் சிகிச்சையில் இருந்து பூரண குணம் அடைந்த இயக்குனர் டி ராஜேந்தர் இன்று சென்னை திரும்புகிறார்.

Update: 2022-07-22 02:00 GMT

அமெரிக்காவில் சிகிச்சையில் இருந்து பூரண குணம் அடைந்த இயக்குனர் டி ராஜேந்தர் இன்று சென்னை திரும்புகிறார்.


 



தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனரும், நடிகர் சிம்புவின் தகப்பனாருமான டி.ராஜேந்தர் கடந்த மாதம் உடல் நிலை குறைவால் சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு உரிய சிகிச்சை வேண்டும் என்றால் அமெரிக்கா அழைத்துச் செல்லவும் என மருத்துவர்களால் அறிவுறுத்தப்பட்டது.




 

இந்நிலையில் நடிகர் சிம்பு அவரை மேல் சிகிச்சைக்காக அமெரிக்க அழைத்துச் சென்றார், 15 நாட்கள் அங்கு அவரை சிகிச்சையில் வைத்து தற்பொழுது அவர் பூரண குணம் அடைந்துள்ளதாக தெரிவித்து அமெரிக்காவிலிருந்து இந்தியாவுக்கு அழைத்து வருகிறார் சிம்பு. இன்று அவர் சென்னை திரும்புகிறார் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Similar News