தமிழகத்தில் பிறந்து தாதாசாகேப் பால்கே விருது வென்ற பழம்பெரும் நடிகை!
இந்தியத் திரைப்படத் துறையின் வளர்ச்சிக்கு மிக உறுதுணையாக இருந்தவர்களுக்கு வழங்கப்படுவது `தாதாசாகேப் பால்கே விருது’.
இந்தியச் சினிமாவின் மிக உயரிய விருதான தாதாசாகேப் பால்கே விருது , இந்த ஆண்டு பழம்பெரும் நடிகையான வஹீதா ரஹ்மானுக்கு வழங்கப்படும் என மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் அறிவித்துள்ளார்.இது பற்றி தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், "இந்தியத் திரையுலகில் அவர் ஆற்றிய அளப்பரிய பங்களிப்பிற்காக இந்த ஆண்டு மதிப்புமிக்க தாதாசாகேப் பால்கே வாழ்நாள் சாதனையாளர் விருது வஹீதா ரஹ்மானுக்கு வழங்கப்படுவதை அறிவிப்பதில் நான் மிகுந்த மகிழ்ச்சியையும் மரியாதையையும் உணர்கிறேன்.
வஹீதா ஜி இந்திப் படங்களில் நடித்ததற்காக விமர்சன ரீதியாக நல்ல பாராட்டுகளைப் பெற்றவர். 'Pyaasa', 'Kaagaz ke Phool', 'Chaudhavi Ka Chand', 'Saheb Biwi Aur Ghulam', 'Guide', 'Khamoshi' போன்ற பல இந்திப் படங்களில் அதற்குச் சான்று. ஐந்து தசாப்தங்களுக்கும் மேலாக நீடித்த அவரது வாழ்க்கையில், அவர் தனது பாத்திரங்களை மிகவும் நேர்த்தியுடன் செய்துள்ளார். 'ரேஷ்மா' மற்றும் 'ஷேரா' திரைப்படத்தில் நடித்ததற்காகத் தேசியத் திரைப்பட விருதும் பெற்றவர். மேலும், பத்மஸ்ரீ மற்றும் பத்ம பூஷண் விருது பெற்ற வஹீதா ஜியின் அர்ப்பணிப்பு ஒரு பாரதப் பெண்ணின் வலிமையை எடுத்துக்காட்டுகிறது. அவர் தனது கடின உழைப்பால் இந்தத் துறையில் மிக உயர்ந்த இடத்தை அடைந்துள்ளார்" என்று பாராட்டியுள்ளார்.
SOURCE :vikatan.com