தன்னம்பிக்கையால் அனைத்திலும் சாதிக்கிறார்.. நடிகர் அஜீத்தை வாழ்த்திய துணை முதலமைச்சர் ஓ.பி.எஸ்.!

மாநில அளவில் துப்பாக்கி சுடும் போட்டியில் தங்கம் வென்ற நடிகர் அஜித்குமாருக்கு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.;

Update: 2021-03-08 11:35 GMT

மாநில அளவில் துப்பாக்கி சுடும் போட்டியில் தங்கம் வென்ற நடிகர் அஜித்குமாருக்கு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

நடிகர் அஜீத்குமார் திரைத்துறை மட்டுமின்றி பல்வேறு விளையாட்டுத்துறையிலும் சாதித்து வருகிறார். அந்த வகையில் சென்னையில் நடைபெற்ற தமிழ்நாடு மாநில துப்பாக்கி சுடுதல் போட்டியில் தங்கம வென்றுள்ளார்.


 



இது தொடர்பாக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தனது ட்வீட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: தனது அயராத உழைப்பாலும் தன்னம்பிக்கையாலும் திரைத்துறை மட்டுமின்றி பல்வேறு துறைகளில் சாதித்துவரும் அன்புச்சகோதரர் திரு.அஜீத்குமார் அவர்கள் சென்னையில் நடைபெற்ற 46வது தமிழ்நாடு மாநில துப்பாக்கி சுடுதல் போட்டியில் தங்கம் வென்றிருப்பதில் மகிழ்ச்சி. அவருக்கு எனது அன்பார்ந்த வாழ்த்துகள்! என்று பதிவிட்டுள்ளார்.


 



அதே போன்று திரைத்துறையினரும் நடிகர் அஜீத்துக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Similar News