தென்கொரிய திரைப்பட இயக்குநர் கொரோனாவால் மரணம்.. ரசிகர்கள் கண்ணீர் அஞ்சலி.!
தென்கொரிய திரைப்பட இயக்குநர் கொரோனாவால் மரணம்.. ரசிகர்கள் கண்ணீர் அஞ்சலி.!;
உலகப் புகழ்பெற்ற தென்கொரிய திரைப்பட இயக்குநர் கிம் கி டுக் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தெற்காசிய சினிமா ரசிகர்கள் மத்தியில் தனி இடம் பிடித்துள்ளார் இயக்குநர் கிம் கி டுக். இவருக்கு 59 வயது ஆகிறது. கொரியாவைச் சேர்ந்த இவர் இயக்கிய ‘சமாரிடன் கேர்ள், 3 அயர்ன், ஒன் ஆன் ஒன், உள்ளிட்ட படங்கள் சர்வதேச அளவில் கவனம் பெற்றவை.
வெனிஸ், பெர்லின் என சர்வதேச திரைப்பட விழாக்களில் இவரின் படம் வெவ்வேறு விருதுகளை குவித்துள்ளது. இப்படி பல்வேறு பெருமைகளுக்குச் சொந்தக்காரரான கிம் கி டுக், கொரோனா பாதிப்பு காரணமாக உயிரிழந்தார் என்ற தகவல் உலகம் முழுவதிலும் உள்ள ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.