நடிகை தீபிகா படுகோனே குடும்பத்தில் அனைவருக்கும் கொரோனா தொற்று உறுதி.!
முன்னணி நடிகையான தீபிகாபடுகோனேவுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. அவர் தந்தையான பிரகாஷ் படுகோனேக்குத் தொற்று ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
முன்னணி நடிகையான தீபிகாபடுகோனேவுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. அவர் தந்தையான பிரகாஷ் படுகோனேக்குத் தொற்று ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அதே போன்று தீபிகாவின் தாய் உஜ்ஜாலா மற்றும் தங்கை அனிஷாவும் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.
தற்போது அவர்கள் அனைவரும் சிகிச்சை பெற்று வந்த நிலையில், பெங்களூரில் குடும்பத்தினரை காண வந்த தீபிகா படுகோனேவுக்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
இதன் காரணமாக அவர் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் தனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தீபிகா படுகோனே தெரிவிக்கவில்லை.