அரசியல் கதையில் களமிறங்க இருக்கும் தனுஷ்

தனுஷ் தனது ஐம்பதாவது படத்தை முடித்துவிட்டு 51 வது படத்தில் அரசியல் கதை அம்சத்தில் நடிக்க இருக்கிறார்.

Update: 2023-08-31 16:45 GMT

தனுஷ் 51- வது படத்தில் நடிக்க தயாராகியுள்ளார். இந்த படத்தை பிரபல தெலுங்கு டைரக்டர் சேகர் கம்முலா டைரக்டர் செய்கிறார். பட வேலைகள் தொடங்கியுள்ளன . இதில் தெலுங்கு நடிகர் நாகார்ஜுனா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக அறிவித்துள்ளார். இந்த படம் அரசியல் கதையம்சத்தில் தயாராவதாக தகவல் கசிந்துள்ளது .


1970 மற்றும் 80களில் நடந்த அரசியலையும் அதில் மாபியா கும்பலுக்கு இருந்த தொடர்புகளையும் பேசும் படமாக உருவாக இருப்பதாக கூறப்படுகிறது . நாகார்ஜுனா அரசியல்வாதியாக வருகிறார்.  தனுஷ் ஜோடியாக ராஷ்மிகா மந்தரா நடிக்கிறார். தனுஷ் கேப்டன் மில்லர் படத்தில் நடித்த முடித்துவிட்டு தற்போது தனது ஐம்பதாவது படத்தை இயக்கி நடித்து வருகிறார். படபிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது . இந்த படத்தை முடித்துவிட்டு 51- வது படத்தில் நடிக்க இருக்கிறார்.


SOURCE :DAILY THANTHI

Similar News