விஜய், சிம்பு படத்தை அடுத்து பொங்கல் விருந்தாக இணையும் தனுஷ் படம்?

விஜய், சிம்பு படத்தை அடுத்து பொங்கல் விருந்தாக இணையும் தனுஷ் படம்?;

Update: 2021-01-05 17:34 GMT
தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு காரணமாக 50% மட்டுமே பார்வையாளர்கள் திரையரங்குகளில் அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்று தமிழக அரசு 100 சதவீத இருக்கைகளுக்கு அனுமதி அளித்துள்ளதால் ரசிகர்கள் மிகப்பெரிய அளவில் திரையரங்குகளில் கூட வாய்ப்பு இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அந்த வகையில் தளபதி விஜய் நடித்த 'மாஸ்டர்' திரைப்படம் வரும் 13-ஆம் தேதியும், சிம்பு நடித்த 'ஈஸ்வரன்' திரைப்படம் வரும் 14-ஆம் தேதியும் பொங்கல் விருந்தாக வெளி வர உள்ளது என்பதும் இந்த இரு படங்களும் மிகப் பெரிய எதிர்பார்ப்பில் உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் விஜயின் மாஸ்டர் திரைப்படம் மற்றும் சிம்புவின் ஈஸ்வரன் ஆகிய இரண்டு படங்களை எடுத்து பொங்கல் விருந்தாக தனுஷ் மற்றும் செல்வராகவன் இணையும் படத்தின் டீஸர் ஒன்றும் வெளியாக இருப்பதாக தகவல்கள் வெளி வந்துள்ளன. கலைப்புலி தாணு அவர்களின் தயாரிப்பில் தனுஷ் நடிப்பில் செல்வராகவன் இயக்கும் படத்தின் டீசர் படப்பிடிப்பு தற்போது சென்னையில் உள்ள முக்கிய ஸ்டூடியோ ஒன்றில் நடைபெற்று வருவதாகவும் இந்த டீசர் பொங்கல் தினத்தில் திரையரங்குகளில் மற்றும் இணையதளங்களில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. ஏற்கனவே தனுஷின் ஜகமே தந்திரம் ட்ரெய்லர் பொங்கல் தினத்தில் திரையரங்குகளில் ரிலீஸாகும் என்று கூறப்படும் நிலையில் தற்போது தனுஷின் இன்னொரு படத்தின் டீசரும் வெளியாவது அவரது ரசிகர்களூக்கு இரட்டை பொங்கல் விருந்தாக இருக்கும்.

Similar News