திருச்சிற்றம்பலமாக தனுஷ் - வைரலாகும் கதாபாத்திர அறிமுக வீடியோ
திருச்சிற்றம்பலம் படத்தில் தனுஷின் கேரக்டர் லுக் வெளியானது.
திருச்சிற்றம்பலம் படத்தில் தனுஷின் கேரக்டர் லுக் வெளியானது.
இயக்குநர் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் படம் 'திருச்சிற்றம்பலம்' படத்தில் நித்யா மேனன், ராஷி கன்னா, பிரியா பவானி சங்கர் ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கின்றனர். படத்தின் கதாபாத்திரங்களை தினமும் ஒன்று என்ற வகையில் தனுஷ் தற்போது அறிமுகப்படுத்தி வருகிறார்.
அந்த வகையில் இதுவரை நித்யா மேனன், ராஷி கன்னா, பிரியா பவானி சங்கர், பாரதிராஜா, பிரகாஷ்ராஜ் ஆகியோர் கதாபாத்திரங்களை அறிவித்த தனுஷ் தற்போது 'திருச்சிற்றம்பலம்' என்ற கதாபாத்திரத்தில் நடிப்பதாக அறிவித்துள்ளார். அதற்காக ஒரு வீடியோ வெளியிடப்பட்டு வருகிறது அந்த வீடியோ தற்போது இணையங்களில் வைரல் ஆகி வருகிறது.