'அசுரன்' தனுஷின் கர்ணன் பட முதல் விமர்சனம் - ரிலீஸுக்கு முன்னரே வைரல்?

'அசுரன்' தனுஷின் கர்ணன் பட முதல் விமர்சனம் - ரிலீஸுக்கு முன்னரே வைரல்?;

Update: 2021-01-26 17:36 GMT
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் தனுஷ். தமிழ் மட்டுமின்றி இந்தி மொழிகளிலும் தற்போது நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தற்போது தனுஷ் நடிப்பில் இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கிய 'கர்ணன்' திரைப்படத்தின் புரொடக்ஷன் பணிகள் சமீபத்தில் முடிவடைந்த நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எனவே இந்த படத்தை பார்த்த  இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் 'கர்ணன்' படம் மிக நன்றாக இருக்கிறது என்று ட்விட்டரில் பதிவிட்டிருக்கிறார். இதை பார்த்த ரசிகர்கள் படம் எப்போது ரிலீசாகும் என்று அவரிடம் கேள்வி கேட்டு வருகின்றனர். மேலும்  இப்படத்தில் பணிபுரிந்த படக்குழுவினர்,  தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட துறையினர் அனைவருக்கும் வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார். இது கர்ணன் படத்தின் முதல் ட்வீட் என்பதால் தனுஷ் ரசிகர்களின் விமர்சனங்களால் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. இப்படத்தைப் பற்றி இயக்குனர் கூறுகையில் "கர்ணன் அனைத்தும் கொடுப்பான்" என்று பதிவிட்டிருந்தார்.

Similar News