ரசிகர்களை ஏமாற்றியதா 'ஆச்சாரியா'?
சில தினங்களுக்கு முன்பு வெளியான சிரஞ்சீவி, ராம்சரண் நடித்த 'ஆச்சாரியா' திரைப்படம் மக்கள் மத்தியில் சரியாக எடுபடவில்லை என்று தகவல்கள் கிடைத்துள்ளன.;
சில தினங்களுக்கு முன்பு வெளியான சிரஞ்சீவி, ராம்சரண் நடித்த 'ஆச்சாரியா' திரைப்படம் மக்கள் மத்தியில் சரியாக எடுபடவில்லை என்று தகவல்கள் கிடைத்துள்ளன.
இயக்குனர் கொரடாலா சிவா இயக்கத்தில் சிரஞ்சீவி, ராம்சரண் பூஜா ஹெக்டே மற்றும் பலர் நடித்து கடந்த வாரம் வெளியான படம் 'ஆச்சாரியா'. சிரஞ்சீவியும் அவரது மகன் ராம்சரண் இணைந்து நடித்த படம் என்பதாலும், ராம்சரண் நடித்து சமீபத்தில் வெளியான ஆர்.ஆர்.ஆர் படம் மிகப்பெரும் வெற்றியைப் பெற்றதாலும் 'ஆச்சார்யா' படம் கண்டிப்பாக ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் எதிர்பார்ப்புக்கு நேர்மாறாக 150 கோடி ரூபாய் செலவில் தயாரான 'ஆச்சாரியா' படம் இதுவரை 100 கோடி அளவிற்கு வசூலை பெறவில்லை என்பதே உண்மை என தெலுங்கு திரையுலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதற்கு முன்பு பிரபாஸ் நடிப்பில் வெளியான 'ராதேஷ்யாம்' படம் எந்த அளவிற்கு ரசிகர்களை திருப்திபடுத்த வில்லையோ அதே அளவிற்கு 'ஆச்சாரியா' படமும் வந்துள்ளது என சிலர் தெரிவிக்கின்றனர்.