ரசிகர்களை திருப்திபடுத்தியதா 'வாரிசு' ட்ரைலர்?

ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுவரும் விஜய் நடிக்கும் 'வாரிசு' பட ட்ரெய்லர்.

Update: 2023-01-05 05:10 GMT

ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுவரும் விஜய் நடிக்கும் 'வாரிசு' பட ட்ரெய்லர். தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் ஒரே நேரத்தில் தமிழ் மற்றும் தெலுங்கில் விஜய் நடிக்கும் வாரிசு படம் வெளியாகிறது. ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் மற்றும் பிவிபி சினிமா தயாரித்துள்ள இப்படத்தை தமன் இசையமைத்துள்ளார்.




 

ராஷ்மிகா, ஷாம், பிரபு, சரத்குமார், பிரகாஷ்ராஜ், ஸ்ரீகாந்த், குஷ்பு, ஜெயசுதா, யோகிபாபு, ஸ்ரீமன், ஜான் விஜய், விடிவி கணேஷ், சஞ்சனா, சாரதி, பரத் ரெட்டி உள்ளிட்டோர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகும் இப்படத்தின் இசை வெளியீட்டு நிகழ்வு பிரமாண்டமாக நடைபெற நிலையில் தற்போது இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.

இப்படம் மொத்தம் 2 மணி நேரம் 49 நிமிட கால அளவை கொண்டுள்ளது மற்றும் தணிக்கை குழு "யு" சான்றிதழை வழங்கியுள்ளது. எதிர்பார்ப்பை ஏற்படுத்திருந்த இந்த ட்ரெய்லரை ரசிகர்கள் பலர் ஷேர் செய்து வருகின்றனர்.

ட்ரெய்லர் உறுதிப்படுத்துவது சென்டிமென்டலான கதைக்களத்தில் ஆக்ஷனை பயன்படுத்தி படம் உருவாகியிருப்பது. 2.28 நிமிடங்கள் ஓடும் மொத்த ட்ரெய்லரும் தெரிவிப்பது குடும்பம் முக்கியம் என்ற ஒன்றைமட்டுமே. பஞ்ச் டயளக்குகளில் விஜய் வழக்கமாக கையாளும் உடல்மொழியை காண முடிகிறது.




 

மேலும் இடையில் வரும் யோகிபாபுவின் காமெடி என்ற பெயரிலான டயலாக்கும் அதற்கு விஜய் கூறும் பதிலும் ஏமாற்றம். தன் தந்தையான தொழிலதிபர் சரத்க்குமாரின் இடத்தில் வாரிசான விஜய் அமர்ந்து எதிராளிகளை சமாளிப்பது போன்ற கதைக்கருவை கொண்டதாக பிரதிபலிக்கிறது. பவர் சீட்ல இருக்காது சார், அதுல வந்து உட்காரர்ரவன்கிட்ட தான் இருக்கும்; ஸீட்டோட ஹீட்டு என்னானு இனி பாப்ப போன்ற வசனங்கள் அனுமானிக்க கதையா உறுதி செய்கின்றன.

தாய்ப்பாசம், பழிவாங்கும் உணர்ச்சி, குடும்பம், ஆக்ஸன் என வழக்கமான கதைக்களத்தை பிரதிபலிக்கும் வகையில் டிரெய்லர் அமைந்திருப்பதால் புதிதாக ஏதும் இல்லாதது அதிர்ப்பதியை ஏற்படுத்தியுள்ளது. இறுதியாக குடும்பம்னா குறை இருக்கும்தான், ஆனா நமக்குன்னு இருக்குறது ஒரே ஒரு குடும்பம்தான் என்ற வசனம் எந்தவித அழுத்தமும் இன்றி ட்ரைலரை முடிவுக்கு கொண்டு வருகிறது.

Similar News