தியேட்டர்களை திறக்க அனுமதியுங்கள்.. முதலமைச்சருக்கு பாரதி ராஜா கோரிக்கை.!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றின் 2வது அலை காரணமாக தியேட்டர்கள் கால வரையின்றி மூடப்பட்டுள்ளது. இதனால் சினிமாத்துறைக்கு பல ஆயிரம் கோடி இழப்பு ஏற்படுவதாக தகவல் வெளியாகிறது. இதனிடையே தமிழகத்தில் தொற்று குறைந்து வரும் நிலையில், பல்வேறு தளர்வுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. ஆனால் தியேட்டர்களை திறப்பது பற்றிய அறிவிப்பு வெளியாகவில்லை.;

Update: 2021-06-21 06:42 GMT

கொரோனா பெருந்தொற்று படிப்படியாக தமிழகத்தில் குறைந்து வரும் நிலையில், தியேட்டர்களை திறக்க அனுமதி அளிக்க வேண்டும் என்று முதலமைச்சர் ஸ்டாலினுக்கு இயக்குனர் பாரதிராஜா கோரிக்கை விடுத்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றின் 2வது அலை காரணமாக தியேட்டர்கள் கால வரையின்றி மூடப்பட்டுள்ளது. இதனால் சினிமாத்துறைக்கு பல ஆயிரம் கோடி இழப்பு ஏற்படுவதாக தகவல் வெளியாகிறது. இதனிடையே தமிழகத்தில் தொற்று குறைந்து வரும் நிலையில், பல்வேறு தளர்வுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. ஆனால் தியேட்டர்களை திறப்பது பற்றிய அறிவிப்பு வெளியாகவில்லை.




 


இந்நிலையில், கொரோனா தொற்று குறைந்த 23 மாவட்டங்களில் 100 பேருடன் சின்னத்திரை படப்பிடிப்புகளை நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதற்கு தமிழக அரசுக்கு பாரதிராஜா நன்றி தெரிவித்துள்ளார். மேலும், இயல்பு நிலை திரும்பும் தருணத்தில் தியேட்டர்களை திறக்க அனுமதி அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Similar News