வழக்கமான ஹரி படத்தை நீங்க பார்க்க மாட்டீங்க, 'யானை' புது மாதிரியான ஹரி படம் - மனம் திறக்கும் இயக்குனர் ஹரி
'யானை' ஒரு எமோஷனலான ஃபீல் குட் படமாக இருக்கும் என இயக்குனர் ஹரி கூறியுள்ளார்.
'யானை' ஒரு எமோஷனலான ஃபீல் குட் படமாக இருக்கும் என இயக்குனர் ஹரி கூறியுள்ளார்.
அருண் விஜய் நடிப்பில் இயக்குனர் ஹரி இயக்கத்தில் 'யானை' திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியானது. அதன் நிகழ்ச்சியில் பேசிய இயக்குனர் ஹரி கூறியதாவது, 'எனது முதல் படமான 'தமிழ்' படத்தில் ஆரம்பித்த பயணம் மெல்ல மெல்ல ஆக்சன் படங்களாக மாறியது அதில் வெற்றி கிடைத்ததால் அதில் நிலைத்து விட்டேன், தற்பொழுது புது ட்ரெண்டை புரிந்து கொண்டேன் என்னை முழுமையாக மாற்றிக் கொண்டு உருவாகியுள்ள படம் 'யானை' என்றார்.
'இதில் எனது பாணியிலான படு வேகம் இருக்காது, ஓங்கி அடிச்சா ஒன்றரை டன் வெயிட்டு இருக்காது, ஒரு எமோஷனல் குட் படமாக இருக்கும். இரண்டு இடத்திலாவது ஆடியன்ஸ் கண்ணீர் சிந்தினால் அந்த படம் வெற்றி அப்படி யோசித்து தான் இந்த படத்தை எடுத்துள்ளேன் கண்டிப்பாக வெற்றி பெறும்" என்றார் இயக்குனர் ஹரி.