மேல் சிகிச்சைக்காக மாற்றப்படும் இயக்குனர் இமயம் பாரதிராஜா

இயக்குனர் பாரதிராஜா சிகிச்சைக்காக தற்பொழுது வேறு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

Update: 2022-08-27 05:14 GMT

இயக்குனர் பாரதிராஜா சிகிச்சைக்காக தற்பொழுது வேறு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.


 



இயக்குனர் பாரதிராஜா தமிழ் சினிமாவின் முத்திரை பதித்த இயக்குனர். இவருக்கு உடல்நிலை குறைவு ஏற்பட்டு மஞ்சள் காமாலை மற்றும் நீர் குறைபாடு தாக்கம் இருந்ததாக தகவல் வந்தன. இருப்பினும் அவர் உடல்நிலை சீராக உள்ளது என மருத்துவமனை தரப்பு வட்டாரங்கள் தெரிவித்தன.


 



இந்நிலையில் பாரதிராஜாவின் மேல் சிகிச்சைக்காக டாக்டர் ராஜகோபால் மேல்பார்வையில் எம்.ஜி.எம் மருத்துவமனைக்கு மாற்றப்படுகிறார். மேலும் பாரதிராஜாவுக்கு உடல்நிலை சீராக உள்ளதாகவும் அவர் விரைவில் குணமாகி வீடு திரும்ப வருகிறார் எனவும் அவரது மகன் மனோஜ் தெரிவித்துள்ளார்.

Similar News