பிரபல இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன் மருத்துவமனையில் அனுமதி.!
பிரபல இயக்னர் எஸ்.பி. ஜனநாதன் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பிரபல இயக்னர் எஸ்.பி. ஜனநாதன் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இயற்கை படத்தின் மூலமாக இயக்குனராக எஸ்.பி.ஜனநாதன் அறிமுகமானார். இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு இருந்தது. இதனிடையே பேராண்மை மற்றும் புறம்போக்கு என்கிற பொதுவுடைமை உள்ளிட்ட பல படங்களை இயக்கியுள்ளார்.
இதனிடையே நடிகர் விஜய் சேதுபதியை வைத்து லாபம் என்ற படத்தையும் இயக்கியதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், இயக்குனர் எஸ்.பி. ஜனநாதனுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் அப்பல்லோ மருத்துவமனையில், ஐ.சி.யு வார்டில் சிகிச்சை எடுப்பதாக சொல்லப்படுகிறது. மேலும், மூளையில் ரத்தக் கசிவு ஏற்பட்டு மூளைச் சாவடைந்ததாக மருத்துவ வட்டாரங்கள் கூறுகிறது. இந்த செய்தியால் திரையுலகினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.